வாங்குபவர்கள் கவனத்திற்கு
புதியதாய், நல்ல மலர்ச்சியுடன், திடமாய் இருப்பதாய் பார்த்து வாங்கவும். நல்ல அடர்ந்த ஆரஞ்சு வண்ணம் கொண்டதாய் இருக்கவேண்டும். அடர்த்தியான ஆரஞ்சு வண்ணம் கொண்ட கிழங்குகளில் கரோட்டீன்
அதிக அளவில் உள்ளது. வெடிப்புகள் கொண்டது, வேர்முடிச்சுகள் நிறைந்தது, வதங்கிய நிலையில் உள்ளது முதலியவற்றைத் தவிர்க்கவும். காரட்டின் உட்புற தண்டுகள் மெல்லியதாக இருப்பின் அதில் சுவை மிகுதியாய் இருக்கும். உட்புற தண்டுகளை பார்த்து வாங்குவது இயலாது என்றபோதிலும், அதன் தலைப்பகுதியில் உள்ள இலைகளின் தண்டின் பருமனைக் கொண்டு உட்புற தண்டின் பருமனை ஓரளவிற்கு அனுமானிக்கலாம்.
புதியதாய், நல்ல மலர்ச்சியுடன், திடமாய் இருப்பதாய் பார்த்து வாங்கவும். நல்ல அடர்ந்த ஆரஞ்சு வண்ணம் கொண்டதாய் இருக்கவேண்டும். அடர்த்தியான ஆரஞ்சு வண்ணம் கொண்ட கிழங்குகளில் கரோட்டீன்

சமைப்பவர்கள் கவனத்திற்கு
குளிர்ந்த நீரில் நன்கு கழுவி, மேல்தோலை சுத்தம் செய்து கொள்ளவும். மேல்தோலை நீக்குவதன் மூலம் அதில் அடங்கியுள்ள உயிர்சத்துக்களை நாம் இழக்க வேண்டியிருக்கும் என்றபோதிலும் சுவைக்காகவும், தோற்றத்திற்காகவும் பெரும்பாலும் அதன் தோலை நீக்கவேண்டியுள்ளது. காரட் வேகவைப்பதாயின் மிக குறைந்த அளவே தண்ணீர் உபயோகிக்கவும். அதேபோல் மிகக்குறைவான நேரமே வேகவைக்கவேண்டும். அதிகம் நேரம் வேக வைப்பதால் அதில் உள்ள பெரும்பான்மையான சத்துக்களை நாம் இழக்க நேரிடும். காரட்டுடன் சிறிது தாவர எண்ணெய் சேர்த்து சமைக்கவும். காரட்டில் அடங்கியுள்ள, கொழுப்பைக் கரைக்கக்கூடிய பீட்டா கரோட்டீனை நமது உடல் கிரகித்துக் கொள்ள இந்த எண்ணெய் உதவுகின்றது.
பாதுகாக்கும் முறை
காரட்டின் தலைப்பகுதியில் அதன் கீரைத் தண்டுகள் இருக்குமாயின் அதனை அகற்றிவிடவும். பிறகு நீரில் நனைத்து ஒரு ப்ளாஸ்டிக் பையில் இட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும். தக்காளிப் போன்ற பழங்களுடன் இதனை வைக்கவேண்டாம். பொதுவாக, நன்கு பழுத்த பழங்களில் இருந்து எத்தலைன் வாயு வெளியேறும். இவை காய்களின் ஆயுளை குறைக்கக் கூடியவை. எனவே பழங்களையும், காய்களையும் எப்போதும் தனித்தனியே வைத்துப் பத்திரப்படுத்தவும்.
மருத்துவ குணங்கள்
இது இயற்கையாகவே இனிப்புத் தன்மை கொண்டுள்ளபடியால் பச்சையாக சாப்பிட மிகவும் சுவையாய் உள்ளது. சமைத்து உண்பதைவிட பச்சையாக சாப்பிடுவதின் மூலம் அதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நமக்கு கிடைக்கும். இதில் வைட்டமின் 'ஏ' செறிந்துள்ள காரணத்தால், ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. அது மட்டுமன்றி இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை தினமும் காரட் சாப்பிடுவதன் மூலம் சற்று குறைக்க இயலும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தியும் செய்கின்றது. குடல் புண்கள் உண்டாகாமல் தடுக்கின்றது. வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமை கொண்டது. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாற்றுடன் எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட பித்த கோளாறுகள் சரியாகும்
0 comments:
Post a Comment