வெள்ளி விளக்குகளை சுத்தம் செய்வதும் எளிதுதான்.சில்வர்ஃபாயில் பேப்பர்களை துண்டுகளாக்கி நீரில் போட்டுக் கொதிக்க வைத்து,அதில் சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளிகளை போட்டு அடுப்பை அணைத்துவிட்டு,கொஞ்ச நேரம் கழித்து, எடுத்து அதே பேப்பரில் வெள்ளிப் பொருட்களை தேய்த்துக் கழுவிபின்பு சோப்புத் தண்ணீரில் கழுவினால் நன்றாக "பளிச்" சென்று இருக்கும்.
சில்வர்ஃபாயில் பேப்பர் எல்லா பேன்சி கடைகளிலும் கிடைக்கும்.பூஸ்ட்,போர்ன்விட்டா போன்றவைகளின் மேல் இருக்கும்,சில்வர்பேப்பரைக் கூட உபயோகிக்கலாம்.மாத்திரைகள் வரும் வெள்ளிநிறக் காகிதத்தையும் உபயோகிகலாம்.
* பித்தாளை விளக்குகளை எலுமிச்சைத் தோல்களை கொண்டு நன்றாக தேய்த்துக் கொண்டு விட்டு, பின்பு எந்த ஒரு க்ளீனிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்துக் கழுவினால்சுத்தமாகி விடும்!மிகவும் பச்சையாக இருந்தால் நாள்பட சரியாகி விடும். அடிக்கடி விளக்குகளை (வாரம் ஒரு முறையாவது)எலுமிச்சை கொண்டு தேய்த்து வந்தால் பளிச்சென்று இருக்க்ம்!பீதாம்பரி பவுடரும் நல்லதே!
"பீதாம்பரி" என்றொரு பவுடர் சூப்பர் மார்கெட்களில் கிடைக்கும். அதைக்கொண்டு கழுவலாம்.
Thursday, July 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment