Wednesday, July 16, 2008

டிஸ்கஷன்

சுற்றியிருந்த உதவி இயக்குநர்களைப் பார்த்தார் இயக்குநர்.

``தயாரிப்பாளர் கதை ரெடியான்னு போன் மேல போன் போடறார்.. என்ன பண்ணீங்க.. பழைய டி.வி.யெல்லாம் பார்த்தீங்களே, ஏதாவது தேறுச்சா.?''

``பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்தியில ஒரு புதுமுக கதாநாயகன் நடிச்சி அட்டர்ஃபிளாப்பான ஒரு படம் இருக்கு.. அதுலயிருந்து ஹீரோ போர்ஷனை மட்டும் எடுத்துக்கிட்டு நம்ம பாணியில அதிரடியா ஜோடனை பண்ணிடலாம் ஸார்...''

``ஒரு வங்காளப் படம் பார்த்தேன்.. அதுலயிருக்கிற தங்கச்சி சென்டிமெண்டைத் தூக்கி இதில வெச்சா எஃபெக்டாயிருக்கும் ஸார்...''

``எட்டு வருஷத்துக்கு முன்னாடி கன்னடத்தில வந்து சரியாப் போகாத ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படம் இருக்கு ஸார்... நம்ம ஹீரோயினை அந்த மாதிரி வடிவமைச்சிடலாம்...''

``அப்ப கதை ரெடின்னு தயாரிப்பாளர்கிட்ட சொல்லிடறேன். இன்னொரு முக்கியமான விஷயம்..''

``தலைப்புதானே ஸார்.. ஒரு தமிழாசிரியரைக் கூட்டி வந்து ஹால்ல உட்கார வெச்சிருக்கேன்.. கூப்பிட்டு விவாதிச்சி அருமையான தமிழ்ப் பெயரை வெச்சிடலாம்..''

``சேச்சே.. வேண்டாம்... தலைப்பையாச்சும் நாமளே வைக்கலாம்..'' என்றார் இயக்குநர்.?

0 comments: