Tuesday, July 15, 2008

மைதா ரவை தோசை

மீந்து போன தோசை மாவில் என்ன என்னவோ செய்யலாம்.அப்பம் கூட செய்யலா, ஊத்தாப்பம்,மைதா ரவை தோசை,அடை ,வெங்காய கொத்து மல்லி தோசை போன்றவை


தேவையானப் பொருட்கள்
மீந்து போன தோசை மாவு - ஒரு கப்
மைதா - கால் கப்
ரவை - அரை கப்
வெங்காயம் இரண்டு
பச்சமிளகாய் - இரண்டு
கருவேப்பிலை - சிறிது பொடியாக அரிந்தது
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி

செய்முறை

ரவையை ஐந்து நிமிடம் ஊறவைத்து அத்துடன் மைதா,தோசை மாவு, வெங்காயம்,மஞ்சள் தூள்,உப்பு,பச்ச மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி ஐந்து நிமிடம் ஊறியதும் தோசைகளாக வார்க்கவும்.


குறிப்பு:இதற்கு தொட்டு கொள்ள சர்க்கரை போதும், இட்லி மிள்காய் பொடியும் நல்ல இருக்கும்

0 comments: