Wednesday, July 16, 2008

ஆஃபீஸ் டூர்

சுதா! எங்க ஆஃபீஸ்லயிருந்து அடுத்த வாரம் ஊட்டிக்கு மூணுநாள் ஃபேமிலி டூர் போறதா ப்ளான் போட்டிருக்கிறோம். நீதான் அடிக்கடி தலைவலி, உடம்பு முடியலைன்னு சொல்லுவியே... அதனால அப்புறமா சொல்றேன்னு சொல்லிட்டேன்!'' வினோத் சொன்னான்.

``என்னை நோயாளியாவே ஆக்கிடுவீங்க போலிருக்கே?'' நாமளும் டூர் போறோம். ஆஃபீஸ்ல சொல்லிடுங்க!'' சுதா பொய்க் கோபத்தோடு சொன்னாள்.

ஒரு வாரம் ஓடிப் போனது.

``சுதா... டூரை அடுத்த மாசத்துக்கு ஒத்திப் போட்டாச்சு. அப்புறம்... அப்பாவும் அம்மாவும் நாளைக்கு வர்றாங்களாம். ரெண்டு மூணுநாள் இருந்துட்டுத்தான் போவாங்க...''

``அத்தையும் மாமாவும் வர்றாங்களா?!... டூர் கேன்சல் ஆனதும் நல்லதாப் போச்சு!'' வினோத் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டாலும், வெளியே செயற்கையான சந்தோஷத்தோடு பதில் சொன்னாள்.

``அம்மாவும், அப்பாவும் வரும்போதெல்லாம் உடம்பு முடியலைன்னு நாடகம் போட்டு, படுக்கையறைக்குப் போய் படுத்துக் கொள்ளும் சுதா, இந்த முறையாவது இருவரையும் நன்றாகக் கவனித்துக் கொள்ளட்டும். அடுத்த மாசம் டூரைப் பற்றிக் கேட்டால் எதையாவது சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான்!''.

0 comments: