Tuesday, July 8, 2008

'கரையான்'களை குணமாக்க....



பிறந்த குழந்தைகளுக்கு தலையில் கருப்புத் திட்டுக்கள் போல ஆங்காங்கே தென்படும். சொல் வழக்கில் இதை 'கரையான்' என்பர்.

மருத்துவத்தில் டாக்டர்கள் இதை 'செபோரிக் டெர்மடிக்ஸ்' என்கின்றனர். . இந்த கரையான்கள் பெற்றோருக்கு கவலை அளிப்பதோடு, அந்த குழந்தைகளுக்கும் அவஸ்தைகளை கொடுக்கும்.

இதை எளிதில் குணமாக்க இதோ ஒரு டிப்ஸ்:

குழந்தைகளை குளிப்பாட்டும் போது, குழந்தைகளுக்கான பிரத்யேக ஷாம்பூகளை பயன்படுத்த வேண்டும்.

அப்போது இந்த கரையான் உள்ள பகுதிகளை சிறிது அழுத்தி தேய்க்க வேண்டும்.

இப்படி தினந்தோறும் குளிப்பாட்டி வந்தால், அந்த கருப்பு கரையான்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விரைவில் சுத்தமாக மறைந்துவிடும்.

ஷாம்பூக்களை பயன்படுத்தும்போது குழந்தைகளின் கண்களில் படாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

0 comments: