Tuesday, July 8, 2008

அஜீரணத்தை விரட்ட...



எவ்வளவுதான் உணவு விஷயத்தில் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் அஜீரணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

அதை சரிசெய்ய பின்வரும் முறைகளை செய்து பார்க்கலாம்.

மாம்பழம் அதிகம் சாப்பிட்டதால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் ஒரு கிளாஸ் பால் குடிக்கலாம்.

நெய் சாப்பிட்டதால் ஏற்பட்ட அஜீரணத்துக்கு ஒரு கிளாஸ் எலுமிச்சை ரசம் போதும்.

அளவுக்கு அதிகமாக வாழைப்பழத்தை தின்று அவஸ்தைப்பட்டால், சிறிது சமையல் உப்பை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால் போதும்.

கேக்கை நிறைய சாப்பிட்டிருந்தால், சிறிது வெந்நீர் மட்டும் குடித்தால் சரியாகிவிடும்.

பப்பாளி பழத்தை அதிகம் சாப்பிட்டிருந்தால், நிறைய தண்ணீர் குடித்தால் வயிறு சரியாகிவிடும்.

0 comments: