Tuesday, July 8, 2008

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க...



உலகில் இன்று பெரும்பாலானோரை வாட்டி வதைப்பது உயர் ரத்த அழுத்த நோய்தான்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம், சிறுநீரகங்கள் மற்றும் மூளை போன்றவைகளும் பாதிப்புக்குள்ளாகும். எனவே, ரத்த அழுத்த அளவை எப்போதும் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருப்பது அவசியம்.

அதற்கான சில குறிப்புகள் :

* ரத்த அழுத்த அளவை அடிக்கடி பரிசோதிக்கவும்.

* ரத்த அழுத்த அளவு, உயர் நிலையில் 120 எம்எம்எச்ஜியும், கீழ் நிலையில் 80 எம்எம்எச்ஜியும் இருக்கலாம். இந்த அளவுகளை தாண்டினால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

* உணவுக்கட்டுப்பாடு மூலம் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கலாம். அதிக காரம், புளிப்பு, உப்பு மற்றும் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட மற்றும் கொழுப்புச் சத்துக்கள் அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும்.

* நடைபயிற்சி, நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது ரத்த அழுத்ததை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்

0 comments: