தேவையானப் பொருட்கள்
கொத்துக்கறி -- 1/2 கிலோ (உப்பு சேர்த்து வேகவைத்தது)
பட்டை -- 1 அங்குலம் அளவு
கிராம்பு -- 4 என்னம்
கடுகு, உளுந்து -- 1/2டீஸ்பூன்
மிளகாய் வத்தல் -- 4 என்னம்
சின்ன வெங்காயம் -- 1 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
மிளகுத்தூள் -- 3/4 டீஸ்பூன்
சீரகத்தூள் -- 3/4 டீஸ்பூன்
சோம்புத்தூள் -- 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் -- ஒரு கையளவு
செய்முறை
வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு, கிராம்பு, உளுந்து தாளித்து மிளகாய் வத்தல், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி வேகவைத்த கறியை சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் கழித்து எல்லா பொடிகளையும் சேர்த்து கிளறி நன்கு எல்லாம் கலந்து வேகும் வரை வேகவைத்து தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடம் பிரட்டி எடுக்கவும்.
ரெடி.
Saturday, July 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment