குழந்தைகளின் கற்றல் திறனுக்கும், தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு.
அதன்படி, தினமும் போதுமான அளவு தூங்காத குழந்தைகளுக்கு, பள்ளியில் கற்றல் திறன் குறைந்துவிடுவதோடு, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடையே உரையாடும் தன்மையும் பாதிப்பதாக, மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆறு முதல் ஏழு வரையுள்ள சுமார் 4,500 சிறார்களின் தூக்க பழக்கத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், சில முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, உரிய நேர அளவில் தூங்காத குழந்தைகளைக் காட்டிலும், தினமும் வீட்டில் போதுமான அளவு தூங்கும் சிறார்கள், சக மாணவர்களுடனும், ஆசிரியர்களுடன் நன்றாக கலந்துரையாடுகின்றன;
வகுப்பில் பாடங்களை உன்னிப்பாக கவனிக்கின்றன; வீட்டுப் பாடத்தையும் செவ்வனே செய்கின்றன என்பது தெரியவருகிறது.
எனவே, இரவு நேரங்களில் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்துக்கு ஆளாகாதவண்ணம், குழந்தைகளை நேரத்துக்கு தூங்கவைப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும்.
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment