Thursday, July 10, 2008

உருளைக்கிழங்கு சேவு

தேவையானப் பொருட்கள்

பெரிய உருளைக்கிழங்கு - 3,
உலர்ந்த திராட்சை - 50 கிராம்,
வறுத்த வேர்க்கடலை பருப்பு - 50 கிராம்,
முந்திரிப் பருப்பு - 25 கிராம்,
பச்சைமிளகாய் நீளமாகக் கீறியது -3, எண்ணெய்,
உப்பு தே.அளவு,
சோம்புத்தூள் - லு ஸ்பூன்,
கறிவேப்பிலை-ஒரு கொத்து,
சர்க்கரை - லு ஸ்பூன்.

செய்முறை :

உருளைக்கிழங்குகளை தேய்த்துக் கழுவி பெரிய துவாரமுள்ள கொப்பரைத் துறுவியில் துறுவி உடனே நீரில் போடவும். கைகளிலேயே துருவலை அலசி அலசி ஒரு துணியில் பரவலாகப் போட்டு நிழலில் உலர்த்தவும்.

இதை ஒரு துணியால் ஒற்றி ஒற்றி ஈரம் போக்கவும்.

வாணலியின் எண்ணெயைச் சுடவைக்கவும். வலைக்கரண்டியில் (அவல் பொறிக்கும் கரண்டி) எண்ணெய் ஊற்றி, சூடானதும் சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக உருளைக்கிழங்குத் துறுவலைப் போட்டு சிவக்காமல் பொரித்து எடுக்கவும். பொரித்ததை ஒரு சுத்தமான ப்ரெளன் பேப்பர் மீது பரவலாகப் போடவும். வலைக்-கரண்டி இல்லையெனில் காய்கறி வடிக்கும் தட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்

உலர்ந்த திராட்சை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை, கடலை, மிளகாய் கீறல் இவற்றைத் தனித்தனியே பொரித்தெடுக்கவும் இத்துடன் சோம்புத்தூள், உப்பு, சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்து உருளைக்-கிழங்குடன் பொரித்ததுடன் கலக்கி நன்றாகக் குலுக்கவும். வித்தியாசமான டேஸ்ட்டுடன் இருக்கும் சேவு இது!

0 comments: