தேவையானப் பொருட்கள்
உருளைக்கிழங்கு -2,
பால்-1 கிண்ணம்,
கோவா-50 கிராம்,
முந்திரி, திராட்சை,பாதாம் பருப்பு - தேவையான அளவு (துண்டுகளாக்கியது), ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்,
கேசரி பௌடர் - 2 துளி,
சர்க்கரை - 1/4 கிலோ, (அவரவர் ருசிக்கு கூட்டி குறைத்து போட்டுக் கொள்ளலாம்),
நெய் - 100 கிராம்,
கார்ன்ஃப்ளார் - 2 ஸ்பூன்.
செய்முறை :
உருளைக்கிழங்குகளை தோல் சீவித் துறுவிக் கொள்ளவும். இதை கோவாவுடன் சேர்த்து மிக்சியிலிட்டு அரைக்கவும். தண்ணீர் சேர்க்கா-மல் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும்.
கனமான பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகளை வறுத்து அத்-துடன் அரைத்த இந்த விழுதைச் சேர்க்கவும்.
நிதானமான சூட்டிலேயே கை நிறுத்தாமல் கலவையை வதக்கவும். கலவை சுருண்டு மணம் வரும் போது சர்க்கரை, கேசரிப்பவுடர் சேர்க்கவும். மீதமுள்ள பாலில் கார்ன்ஃப்ளாரை கரைத்து இதனுடன் ஊற்றி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளறிக் கொண்டிருக்-கவும்.
பாத்திரத்தில் உருண்டு வரும் போது நெய்தடவிய தட்டில் கொட்டி ஆறிய பிறகு துண்டுகளாக்கவும். வித்தியாசமான டேஸ்ட்.-டுடன் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு அல்வா.
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment