தேவையானப் பொருட்கள்
ஒரே அளவான சிறு வகை உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
உறைந்த ஆடையுடன் கட்டித் தயிர் - 1/2 லிட்டர்,
மசாலா செய்ய:
(இஞ்சி-1 துண்டு, பூண்டு-4 பல்,
கஸுரி மேதி - 2 ஸ்பூன் -
சிவந்த மிளகாய் -4),
நெய்-3+2 ஸ்பூன்,
தக்காளி ஷூஸ் கெட்டியாக ஒரு கிண்ணம்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து உரிக்கவும். டூத்பிக்கினால் கிழங்கு ஒவ்வொன்றையும் குத்திவிடவும்.வாணலியில் 3 ஸ்பூன் நெய்விட்டு உருளைக்-கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்.
இஞ்சி முதல் மிளகாய் வரையுள்ள சாமான்-களை வெண்ணெய் போல அரைத்து, உப்பு சேர்த்து ரோஸ்ட் ஆகிக் கொண்டிருக்கும் உருளைக் கிழங்-குடன் போடவும்.
இரண்டும் சேர்ந்து பொன்னிற-மானதும். தயிர் முழுவதையும் கடைந்து ஊற்றவும்.தயிர் கொதித்து வற்ற ஆரம்பித்ததும் தக்காளி ஜூஸைச் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்புப் பதமாக வந்தவுடன் இறக்கவும்.
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment