Thursday, July 10, 2008

உருளைக்கிழங்கு டிக்கி

தேவையானப் பொருட்கள்

உருளைக்கிழங்கு -4,
ப்ரெட் ஸ்லைஸ் - 2,
வேகவைத்த பட்டாணி - 1 கரண்டி,
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்,
ஓமம் -1 ஸ்பூன்,
ரவை - 2 ஸ்பூன்,
துறுவிய வெங்காயம் - 1 கரண்டி,
கொத்தமல்லி விதைத் தூள் -1 ஸ்பூன்,
ருசிக்கு உப்பு. நெய் -சிறிதளவு,
எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை :

உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து உதிர்த்து வைக்கவும்.
ப்ரெட் ஸ்லைஸ்களை தண்ணீரில் நனைத்து பிழிந்து வைக்கவும். மற்ற எல்லா சாமான்களுடனும் உருளைக்கிழங்கு, ப்ரெட் ஸ்லைஸ்களுடன் சேர்த்து நன்கு பிசையவும்.

கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி வைக்கவும்.வடை போல தட்டி நான்ஸ்டிக் தவாவில் நெய் தடவி வட்டமாக சிறிது இடைவெளிவிட்டு வைத்து வேக வைக்கவும்.

பொன்னிறமாக மாறியதும் ஸாஸ், சட்னியுடன் பரிமாறவும்.

0 comments: