தேவையானப் பொருட்கள்
உருளைக்கிழங்கு - 5,
கடலைமாவு _ 2 கரண்டி,
பச்சை கொத்தமல்லித் தழை - 1 கரண்டி,
சீரகம் - 1 ஸ்பூன்,
தேங்காய்த் துறுவல் - 1 கிண்ணம்,
பச்சை மிளகாய்த் துறுவல் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
சர்க்கரை - 1/2 ஸ்பூன்,
எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து உரிக்கவும். உரித்த கிழங்குகளைத் துறுவி மாவு போலப் பிசையவும். இத்துடன் மாவு, உப்பு சேர்த்து பிசையவும். கொத்தமல்லித்தழை, சீரகம், தேங்காய்த்துறுவல், சிறிது, உப்பு, மிளகாய்த்துறுவல் சர்க்கரை ஆகிய-வற்றை கலந்து மசாலாக் கலவையாக்கி தனியாக வைக்கவும்.
இந்த உருளைக்கிழங்கு கலவையை கொஞ்சம் எடுத்து ஈரக்கையில் உருட்டவும். பின் இதைக் கிண்ணம் போல செய்து அதனுள் மசாலாக் கலவையை 1 ஸ்பூன் போட்டு உருட்டி மூட-வும். விரிசல் இல்லாமல் உருட்டி எண்-ணெ-யில் உடனுக்குடன் பொரித்துப் பரிமாறவும்.
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment