டாக்டர் எப்படியாவது எனது மனைவியைக் காப்பாற்றுங்கள்,'' என்று கதறினான் ராஜா.
``ஐயம் வெரி வெரி சாரி சார். உங்கள் மனைவியின் வயிற்றில் பலமாக அடிபட்டதால் குழந்தையுடன் கர்ப்பப்பையையும் சேர்த்து`எடுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அதனால், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை'' என்றார் டாக்டர் சோகமாக.
அப்பொழுது நர்ஸ் ஓடி வந்து ``டாக்டர், 5_ம் நம்பர் பேஷண்டுக்கு பிரசவ வலி கண்டு விட்டது'' என்று கூற, டாக்டர் உடனே வெளியேறினார்.
அந்தப்பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டு மிகவும் பலவீனத்தாலும், அதிக ரத்தப் போக்காலும் காப்பாற்ற முடியாமல் இறந்து விட்டாள். அவள் யார்? எங்கு இருந்து வந்தாள்? என்ற விபரங்களும் தெரியவில்லை.
சற்று முன், மருத்துவமனைக்கு அருகில் நடந்த விபத்தில் அடிப்பட்டவர்களை பொது மக்கள் கொண்டு வந்து இங்குச் சேர்த்து இருந்தார்கள். அவர்களில் இந்தப் பெண்ணும் இருந்தாள் என்று நர்ஸ் கூறினாள். பிறந்தக் குழந்தையோ இதைப் பற்றி எதையும் அறியாமல் பாவம் பசியால் அழுதது. அடுத்த அறையிலோ தன் தாய்மையும், குழந்தையும் ஒரு சேர பறிகொடுத்துவிட்டு சுயநினைவின்றி இருந்தாள் ராஜாவின் மனைவி சந்திரா.
டாக்டருக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. விபத்தில் இறந்த இந்தக் குழந்தையை யாராவது தேடி வரும் வரை ராஜாவின் மனைவியிடம் வளரட்டும் என்று நினைத்து இந்த விபரத்தை ராஜாவிடம் கூறினார்.
இதைக் கேட்டவுடன் ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்த ராஜா, இந்த விஷயத்தைப் பற்றித் தன் மனைவியிடம் கூறாதீர்கள் என்று டாக்டரை என்று கேட்டுக் கொண்டு, அந்தக் குழந்தையை வாங்கிக் கொண்டான்.
இறந்த அந்தக் குழந்தையின் தாய்க்கு அடக்கம் பண்ண வேண்டிய செலவுக்கும், மருத்துவமனைக்குச் சேரவேண்டிய பணத்தையும் கொடுத்து விட்டு, தன் மனைவியுடனும், குழந்தையுடனும் சந்தோஷமாக தனது வீடு நோக்கிப் பயணமானான்.
அவன் எடுத்துச் செல்லும் குழந்தை வேறு யாருடையதும் இல்லை, இவனது ஆபீஸில் வேலை செய்தபோது இவனால் ஏமாற்றப்பட்டு, வேலையில் இருந்து நீக்கப்பட்ட சுஜாதாவின் குழந்தைதான் அது! தனது வாரிசு என்று தெரியாமலேயே குழந்தையை அணைத்து முத்தம் கொடுத்தான் ராஜா.
Saturday, July 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment