Thursday, July 10, 2008

எக்ஸ்ட்ரா கிரிஸ்பி ஆனியன் பக்கோடா

தேவையான பொருட்கள்:

வெங்காயம் -2,
கார்ன்ஃபிளோர்-கடலைமாவு- தலா2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள்-காரத்துக்கு ஏற்ப,
கருவேப்பிலை-சிறிதளவு,
உப்பு, எண்ணெய்-தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயத்தை மெலிதாக சீவி அதன் மீது உப்பைத் தூவவும். அரைமணி கழித்து வெங்காயத்தை நன்கு பிழிந்து இத்துடன் கார்ன்ஃபிளவர், கடலைமாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசைந்து சூடான எண்ணெயில் பொரிக்கவும்.கருவேப்பிலை தூவி அலங்கரிக்க டேஸ்ட்டான ஆனியன் பக்கோடா ரெடி!

0 comments: