Thursday, July 10, 2008

பாகற்காய் ஃபிரை

தேவையான பொருட்கள்:

ஸ்லைஸ் செய்த பாகற்காய்-2கப்,
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா-ஒரு டீஸ்பூன்,
ஆலிவ் ஆயில்-ஒரு கப்,
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

பாகற்காயில் உப்பு சேர்த்து ஊற வைத்து இதை அரை மணி நேரம் கழித்துப் பிழிந்து எடுக்கவும். அதை கரம்மசாலா மற்றும் மிளகாய்த்தூளில் பிசறி ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மசாலாவில் ஊற வைத்த பாகற்காயை ஆலிவ் ஆயிலில் பொரித்து எடுக்கவும்.

இந்த ஃப்ரை டயாபடீஸ் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது!

0 comments: