Wednesday, July 16, 2008

மருமகள்

அத்தை மணி பத்தாச்சு! வயசான காலத்துல நீங்க தூக்கங் கெடக் கூடாது. முதல்ல போய்ப் படுங்க.''

மாமியாரின் நெற்றியில் அமிர்தாஞ்சனம் தடவி, படுக்கையில் படுக்க வைத்து போர்வையைப் போர்த்தி விட்டாள் மருமகள் பத்மா.

``ஏம்மா அவனுக்குச் சாப்பாடு?''

``அத்தை அதைப் பத்தி கவலையே வேண்டாம். இனிமே நான்தான் அவரைப் பார்த்துக்குவேன். நீங்க தூங்குங்க.''

அப்பால் நகர்ந்தாள் புது மணப் பெண் பத்மா. இந்த மிஜி யுகத்துல இப்படி ஒரு மருமகள் கிடைத்தது பற்றிப் பூரித்துப் போனாள் மாமியார் மங்களம். பக்கத்தில் படுத்திருந்த தன் கணவனிடம் மருமகள் புராணம் படித்தபடியே தூங்கிப் போனாள்.

லேட்டாக வந்த கணவன் லோகு கேட்டான்.

``எங்க பத்மா அம்மா, அப்பா?''

``ஸ்... அவங்களை தூங்க வைச்சுட்டேன். பசி வயித்தைக் கிள்ளுது. நான் போன்ல சொன்னபடி சிக்கன் அயிட்டம் எல்லாத்தையும் வாங்கி வந்திட்டீங்களா? சின்ன வயசிலிருந்தே எனக்கு சிக்கன்னா உசிரு. முதல்ல லெக் பீஸ் ரெண்டை எடுத்து தட்டில வையுங்க... என்னங்க, என் தட்டுல வைக்கச் சொன்னேன். சீக்கிரம்....!

அவள் சாப்பிடுவதைப் பார்த்து லோகு விக்கித்துப் போனான். கதவருகே நின்று இதை ஒட்டுக்கேட்ட அப்பாவுக்கு சிக்கன்குனியாவே வந்தது போல நடுங்கிப் போனார்..

0 comments: