ஏங்க.. ஆட்டோவை கொஞ்சம் அந்த கடை முன்னாடி நிறுத்தச் சொல்லுங்களேன்...''
உடம்பு முடியாத நிலையில் இருக்கும் நாத்தனாரை பார்க்கச் செல்லும் வழியில் கணவன் கேசவனிடம் சொன்னாள் மாலினி.
ஆட்டோ கடைமுன் நின்றது.
இரண்டு பால் பாக்கெட்டுகளை வாங்கி மீண்டும் ஆட்டோவில் ஏறினாள் மாலினி.
``எதுக்கு மாலினி பால் வாங்கியிருக்கே... உடம்பு சரியில்லாதவங்களை பாக்கப்போகும் போது பழம்தான் வாங்கணும்.. அதுதான் வாங்கியாச்சே...''
``எல்லாம் காரணமாத்தாங்க.. பாவம் இப்பதான் அவங்க உடம்பு தேறி வருது... சொந்த பந்தம்னு பலபேர் அவங்களைப் பாக்க வருவாங்க... வரவங்க எல்லாருக்கும் டீ.. காபினு போட்டு கொடுக்க வேண்டி வரும்.. இந்த சமயத்துல அவங்க அடிக்கடி வெளிய போய் அலைக் கழியணும்.. அதுதான் நம்மால அவங்களுக்குத் தொந்தரவு வந்திடக் கூடாதுன்னு.. பால் பாக்கெட்டை வாங்கிட்டேன்..'' என்றாள் மாலினி
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment