Wednesday, July 16, 2008

ஆகவே

சார்... என் மனைவி சீரியலே பார்க்க மாட்டேங்கிறா....''

``அட...''

``தப்பித் தவறி பார்த்தாலும் கொஞ்சம்கூட கண்கலங்க மாட்டேங்கிறா...''

``ஆச்சரியமா இருக்கே....''

``என் அம்மாவைப் புகழ்ந்துகிட்டே இருக்கா...''

``இந்தக் காலத்துலே இப்படியா...?''

``என்னை ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேச மாட்டேங்கிறா...''

``ஐயய்யே....''

``தள்ளுபடி சீசன்லேகூட புடவை நகையெல்லாம் வாங்க மாட்டேங்கிறா...''

``நிஜமாவா...?''

``ஆமா... அதுமட்டுமில்லே... சமைக்கிறது துவைக்கிறது கூட்டுறது பெருக்கிறது எல்லாம் என்னை எதிர்பார்க்காம அவளே செஞ்சுடுறா...''

``நம்பவே முடியலையே...''

``ராத்திரி தூங்குறப்ப எனக்கு கை கால் அமுக்கிவிடுறா... காலையிலே கையிலே காபியோட வந்து என்னை எழுப்புறா''

``என்ன இது... அதிர்ச்சி மேலே அதிர்ச்சியா தர்றீங்க... அவங்க பெண் ஜென்மம்தானா...?''

``எனக்கும் அதேதான் சக்தேகம் வக்கீல் சார்... அதனாலே அவகிட்டேர்ந்து எனக்கு விவாகரத்து வாங்கித் தந்துருங்க...''.

0 comments: