என்ன இருந்தாலும் மாமா ரிட்டையர் ஆனதும் ஆளே மாறிட்டார் அத்தே. காலையில் காபி கொடுக்கலாம்னு அவர் அறைக்குப் போனா, ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் தலையணையில் மறைக்க ஆரம்பிச்சுட்டார். இன்றைக்கு மட்டுமல்ல. நேற்றும் கூட அப்படித்தான் செய்தார்...''
ஹேமா கூறியதைக் கேட்டதும் மங்களத்திற்கு சுருக்கென்று தைத்தது. `அந்தக் காலத்தில் தன்னை விரட்டி விரட்டி காதலிச்சி கல்யாணம் பண்ணினவர். இதுவரைக்கும் எதையும் மூடி மறைக்காதவர். அவரா இப்படி...இதை எப்படியும் கண்டுபிடிச்சாகணுமே!'& மனதில் போட்டுக் குழம்பினாள் மங்களம்.
அடுத்த நாள் மருமகள் போட்ட காபி டம்ளரை கையில் ஏந்தியபடியே தனது கணவரின் அறையில் நுழைந்தாள் மங்களம்.
மங்களத்தைப் பார்த்ததும் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அவசர அவசரமாக மறைக்க முயன்றார் சதாசிவம்.
``என்ன அது? கொடுங்க பார்க்கலாம்.''
``வேண்டாம் மங்களம்.''
``இப்ப கொடுக்கப் போறீங்களா இல்லையா?'' என்று கூறிக்கொண்டே அவர் கையில் உள்ள புத்தகத்தை வெடுக்கென்று பிடிங்கியபடி வெளியே வந்து பிரித்துப் பார்த்தவளுக்கு ஒரே அதிர்ச்சி. புத்தகத்தின் நடுவே ஒரு கடிதம் இருந்தது. படித்துப் பார்த்தாள். அது அந்தக் காலத்தில் மங்களம் சதாசிவத்திற்கு எழுதிய காதல் கடிதமாக இருந்தது. அப்போது அங்கே வந்த மருமகளிடமிருந்து அதை முந்தானையில் மறைக்க முயன்று கொண்டிருந்தாள்..
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment