
தேவையான பொருட்கள்
பாசுமதிஅரிசி - 2 ஆழாக்கு (சாதமாக தயார் செய்து வைத்து கொள்ளவும்),
கேரட்- 2,
பட்டாணி -200 கிராம்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
பூண்டு - 5 பல்,
பீன்ஸ்-200 கிராம்.
செய்முறை
நீளவாக்கில் கேரட்டை கட் பண்ண வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ் இதனுடன் பட்டாணியை உப்பு போட்டு லைட்டாக வேக வெச்சிக்கணும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் (நெய் மட்டும்தான். ஏன்னா, இது நெய் ரைஸ்) ஊற்றி ஏலக்காய், பட்டை, லவங்கம் போட்டு வதக்கி, சிறிது முந்திரி போட்டு வருத்து, அரிந்துவைத்த வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, வேக வைத்த காய்கறிகளை போட்டு, லைட்டாக வதக்கி, உப்பு சேர்த்து, இந்தக் கலவையை வேக வைத்த பாசுமதி அரிசியில் போட்டு கலந்து இறக்கிவிட்டால், சுட சுட, கம கம நெய் ரைஸ் தயார். உங்க அலங்கார திறமைகளை பயன்படுத்தி, நெய் ரைஸை நன்றாக அலங்கரித்து, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுத்தால், ஏதோ ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் ரெசிபி என நினைத்து உங்களை புகழ்ந்து தள்ளிவிடுவார்கள்.
0 comments:
Post a Comment