தேவையான பொருட்கள்:
சௌ-சௌ-1/2 கப்,
காரட்-1/4 கப்,
இஞ்சி ஜுஸ்-2 டீஸ்பூன்,
நறுக்கிய பூண்டு-1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி-சிறிதளவு,
நறுக்கிய வெங்காயம்-1/2 கப்,
சீரகம், சோம்பு,
மிளகு-தலா 1/2 டீஸ்பூன்,
எண்ணெய்-1 டீஸ்பூன்.
செய்முறை: காய்களை நன்கு வேக வைக்கவும். சோம்பைத் தாளித்து, பூண்டு, வெங்காயத்தை அதனுடன் வதக்கி வேகவைத்த காய்களை இத்துடன் சேர்க்கவும். காய்கள் கரைந்த பின் இறக்கி, மிளகுத்தூள், உப்பு சேர்த்துச் சூப்பாகக் குடிக்கலாம்.
ஸ்பெஷல் :
காலை உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக இதைச் சாப்பிடலாம். நிறைய மாம்பழம் சாப்பிட்டு உடம்பு எடை அதிகமாகியோ, அல்லது உடம்பு சூடாகியோ இருந்தால் இந்த சூப் உபயோகமாக இருக்கும்!
Wednesday, July 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment