Monday, July 7, 2008

பெசரட் தோசை


தேவையானவை

பயற்றம்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1 கப்
பொடித்த சுக்குப் பொடி - அரை தேக்கரண்டி
மிளகுப் பொடி -1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
சீரகம் -1 தேக்கரண்டி
பெருங்காயம் - கொஞ்சம்
கொத்துமல்லித் தழை -4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

பயற்றம் பருப்பு, பச்சரிசையை நன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைக்கவும். உப்பு, சுக்குப்பொடி, மிளகுத்தூள், பெருங்காயப்பொடி சேர்த்து கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லித் தழை, சீரகம் கலந்து நன்கு நீர் ஊற்றி தோசைப் பக்குவத்திற்கு கரைத்துக்கொள்ளவும். ரவாதோசை வார்ப்பதுபோல் வளர்க்கவும். ரொம்பவும் சத்தான, ருசியான எல்லா வயதினரும் சாப்பிடக்கூடிய நல்ல புரதச்சத்து உள்ள செரிமானம் ஆகும் உணவுப் பண்டம் இது.

0 comments: