இன்று நேரத்தோடு வீட்டுக்கு வந்து விட்டான் ரமேஷ். மாலா காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு,
``நம்ம புள்ளே சரியா படிக்க மாட்டேங்கிறான்... எனக்குக் கடன்காரர்களுக்குப் பதில் சொல்லத்தான் நேரமிருக்கு. உங்களால, வாங்கற சம்பளத்தை நல்லபடியா செலவு செய்து கடன் உடனில்லாம குடும்பத்தை நிம்மதியா நடத்தவும் முடியல... சீட்டு கிளப்பே கதின்னு இருக்கீங்க. இப்படியே போனா...''
``கொண்டு வரச் சொல்லு நம்ம பையனோட மார்க் லிஸ்ட்டை... எதுல வீக்னு பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுத்துச் சரி பண்ணிடறேன்....''
சிறுவன் ஒரு பேப்பரை எடுத்து வந்து நீட்டினான்.
``என்னடா இது? மார்க் லிஸ்ட் கேட்டா மளிகைக் கடை பாக்கி, பால்காரன் பாக்கி, காய்கறிக்கடை பாக்கின்னு உங்கம்மா எழுதி வச்சிருக்கிற கடன் பாக்கி லிஸ்ட்டைக் கொண்டுவந்து காட்டறே? திமிரா?''
``முதல்ல நீங்க இம்ப்ரூவ் பண்ணிக்கப் பாருங்க டாடி... வீடு நிம்மதியா இருந்தா போதும். படிப்புல நான் தன்னால இம்ப்ரூவ் ஆயிடுவேன்...'' என்றவாறே அகன்ற அந்தத் தகப்பன்சாமியை பிரமிப்போடு பார்த்தான் ரமேஷ்..
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment