தேவையானப் பொருட்கள்
கடலைமாவு =100கி
அரிசிமாவு =2ஸ்பூன்
உளுந்தம்பருப்பு =100கி
கடலைப்பருப்பு =4ஸ்பூன்
மிளகாய்பொடி =2ஸ்பூன்
ப.மிளகாய் =4
உப்பு தேவையானது
கருவேப்பிலை =சிறிது
பெருங்காயம் =1/4ஸ்பூன்
எண்ணை =பொரித்தெடுக்க
கடுகு =1ஸ்பூன்
செய்முறை
உளுந்தை 2மணி நேரம் ஊறவைத்து அரைத்துகொள்ளவும்.
அரைத்த உளுந்துடன் அரிசிமாவு, கடலைமாவு, உப்பு சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைக்கவும்.
4மணி நேரம் ஊறிய பிறகு கடுகு தாளித்து கொட்டி, பொடியாக நறுக்கிய ப. மிளகாய், கருவேப்பிலை
, பெருங்காயம், கடலைப்பருப்பை ஊறவைத்து பிழிந்து போட்டு கரைக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு கரண்டியால் மாவை மொண்டு ஊற்றி மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment