Saturday, July 12, 2008

ஹெல்தி மஷ்ரூம் டோஸ்ட்

தேவையான பொருட்கள்:

கோதுமை பிரட் - 4,
நறுக்கிய காளான் - அரை கப்,
இஞ்சி பொடியாக நறுக்கியது - சிறிதளவு,
மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 4 டீஸ்பூன்,
கொத்துமல்லி தழை -சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, காளானை வதக்கவும். பிறகு அத்துடன் தக்காளி சாஸை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையைக் கிளறி மிளகு பொடி, உப்பு, கொத்துமல்லி சேர்த்து 5 நிமிடம் கழித்து கீழே இறக்கவும். இதை 2 பிரட்டுகளுக்கு நடுவில் வைத்து தேவைப்பட்டால் வெண்ணெய் சேர்த்து) தோசைக் கல்லில் வதக்க 5 நிமிடத்தில் மஷ்ரூம் டோஸ்ட் ரெடி

0 comments: