வால்மீகி கிரிஸம் பூதா ராம ஸாகர காமினி, புனாது புவனம் புண்யா ராமாயாண மஹா நதி''.
வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி, ராமன் என்ற கடலில் கலப்பதற்கு, பூமியைப் புனிதப்படுத்திக் கொண்டு செல்லுகின்ற மகாநதியே ராமாயணம்.
ராமாயணம் என்பது இந்தியாவின் சிறந்த புராதனமான இதிகாசம்.
ஷ்ரீராமனுடைய அவதாரத்தை பரிபூரணமாக ஆக்குவதற்காக மகாலட்சுமியும், சீதா பிராட்டியாக ஜனக குல சுந்தரியாக அவதாரம் செய்தாள்.
காவியம் என்னவோ ராமாயணம் தான். ஆனால் வால்மீகி ``சீதாயா சரிதம்'' என்று கூறுகிறார்.
எம்பெருமான் எதற்காக ஷ்ரீராமனாக அவதாரம் செய்தார்? ராவணனை சம்ஹாரம் செய்வதற்காக அவதாரம் செய்தார். அவரோடு எத்தனை பேர்கள் அவதாரம் செய்தார்கள். எம்பெருமான் ஷ்ரீராமனாக அவதாரம் செய்யும் பொழுது யார் யார் என்னென்ன வேடங்கள் போட வேண்டும் என்று வைகுண்டத்தில் தீர்மானம் செய்கிறார்கள். இதை அருணகிரிநாத பெருமான்கூட தம் திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.
ஷ்ரீமந் நாராயணனுடைய அவதாரங்களில் மிகவும் சிறப்பானது, முக்கியமானது இராம அவதாரம் ஆகும்.
கிருஷ்ணாவதாரத்தில் என்ன நடக்கும் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். இராமாவதாரத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது மானுட அவதாரம் எடுத்த ராமனுக்குத் தெரியாது. அதுதான் இந்த அவதாரத்தின் மகிமை.
ஷ்ரீராமனுடைய ஜனன காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்ச நிலையில் இருந்ததாம். அதனால் ஷ்ரீராமருடைய ஜாதகத்தை எழுதி பூஜா கிருகத்தில் வைத்து பூஜிப்பது மிகவும் சிலாக்கியம்.
இந்த ஜாதகத்தை வைத்துப் பூஜிப்பவர்களுக்கும், வைத்திருப்பவர்களுக்கும், ஜாதக ரீதியாய் ஏற்படக்கூடிய நவக்கிரக நோஷ நிவர்த்தியும், ஸர்வ வியாதி நிவர்த்தியும், ஐஸ்வர்ய அபிவிருத்தியும், ஆயுள் ஆரோக்யமும் கிடைக்கும்.
இராமாயணக் காவியத்தை உலகிற்கு எடுத்து இயம்பும் வால்மிகி, வேடனாக - வழிப்பறி கொள்ளைக்காரனாக இருந்தார். ஒரு சமயம் நாரதர் காட்டு வழியே வந்து கொண்டிருந்தார். வேடன் அவரைக் கொள்ளையடிக்க எண்ணித் தடுத்தான்.
``வேடனே, நான் இதே இடத்தில் இருக்கிறேன். நீ செய்வது பாவச் செயல். உன் மனைவி, குழந்தைகளுக்காக செய்கிறாய். ஆனால் இந்தப் பாவச் செயல்களுக்கான பங்கினை உன் மனைவியும், குழந்தைகளும் பங்கு போட்டுக் கொள்கிறார்களா என்று கேள்'' என்றார்.
வேடனோ கேட்டு வருவதாகப் போனவன் போன சுறுக்கில் வந்தான்.
``என்ன சொன்னார்கள் வேடனே!''
``ஐயா, அவர்கள் பாவத்தில் பங்கு போட்டிக் கொள்ள மாட்டார்களாம். அவர்களைக் காப்பாற்றுவது என் பொறுப்பாம். என் பாவச் சுமையைக் குறைக்க எனக்கு தாங்கள் தான் வழிகாட்டவேண்டும்'' என்றான் பணிந்து.
உடனே நாரதர் அந்த வேடனை ஒரு மரத்தடியில் அமர வைத்தார். ``வேடனே, `மரா', `மரா' என்று சொல்லிக் கொண்டே இரு'' என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
வேடன் ``மரா மரா'' என்று கூறிக்கொண்டே இருந்தான். மரா என்றால் போக்குகிறவன். எதைப் போக்குகிறவன்! பாவத்தைப் போக்குகிறவன். மன் என்றால் தலைவன். பாவத்தைப் போக்கும் தலைவனான ராமனை தியானம் பண்ணியதால் வேடனுக்கு ராமாயணம் எழுதும் புண்ணியம் கிடைத்தது.
இந்த `மரா' என்ற நாமத்தை மரா மராம என்று சொல்லும் பொழுது அது ராமராம என்ற சப்தத்தைக் கொடுக்கிறது. வேடனைச் சுற்றி புற்று மூடியது. ராமநாமம் புற்றிலிருந்து விடாமல் ஒலித்ததால், அவர் வன்மீகர் என்று பெயர் பெற்றார். அதே வால்மீகி என்று மறுவியது.
அயோத்தி என்னும் நகரையாண்ட மன்னன் தசரதன். பத்து திசைகளிலும் இவன் ரதத்தை செலுத்துபவன் என்பதால், இவனுக்கு தசரதன் என்று பெயர். கௌஸல்யா, சுமித்திரா, கைகேயி என்று மூன்று மனைவியர்கள் இருந்தும் புத்திரப்பேறு இல்லை.
புத்திர காமேஷ்டி யாகம் செய்து யாகத்தில் தோன்றிய யாக புனித பாயசத்தை மூன்று மனைவியரும் உண்டார்கள். சுமித்திரைக்கு இரண்டு பங்கு பாயசத்தைக் கொடுத்துவிட லஷ்மணன் - சத்ருக்னன் என்று இருவர் பிறந்தனர். கௌஸல்யாவுக்கு ராமனும், கைகேயிக்கு பரதனும் பிறந்தார்கள்.
புனர்ப் பூச நட்சத்திரமும், கடக ராசியும் ராமனுடையவை.
பரதன் - பூச நட்சத்திரம்; மீன லக்னம்.
லட்சுமணன் - ஆயில்ய நட்சத்திரம் - கடகலக்னம்.
சத்ருக்னன் - மக நட்சத்திரம் - சிம்மலக்னம்.
இவர்கள் பிறந்த மாதம் சித்திரை. சிறந்த லக்னம் கடக லக்னம். பதினோராம் இடத்திற்குரிய நான்கு கிரகங்களும் உச்ச நிலையில் இருந்தன.
ஐந்து கோள்கள் உச்சமானால், அந்த நேரத்தில் பிறந்தவன் உலகை ஆள்வான் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.
ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள். சுகதுக்கங்களில் சலனம்அடையாமல் தான் ஆனந்தமாகவே இருந்து கொண்டு மற்றவர்களுக்கு ஆனந்தத்தை தருபவன்தான் ஷ்ரீராமன்.
குழந்தைக்கு ராமன் என்று பெயர் வைத்தவர் வசிஷ்டர்.
கடலைத் தாண்டும் பொழுது அனுமனை அரவை என்ற அரக்கியும், சிம்ஹை என்ற அரக்கியும் தடுத்தனர். அவர்களைத் தாண்டிச் செல்ல ராம நாமத்தைதான் உச்சரித்தார் அனுமன். அப்பொழுதுதான் ராம நாம மஹிமையை உணர்ந்தான் அனுமன்.
`ராம' என்னும் பெயர் சிறப்பை கம்பர் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமு மின்றித் தீருமே
இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்'' என்கிறார்.
வாலியின் நெஞ்சில் ராமனின் அம்பு பாய்கிறது. அந்த அம்பில் `ராம' என்னும் எழுத்தைக் காண்கிறான் வாலி.
இராமன் அனந்தன். முடிவு இல்லாதவன். அவன் குணங்களும் எல்லை அற்றவை. அவனுடைய நாமத்தையும், திருக்கதையையும் சொல்பவரும், கேட்பவரும், படிப்பவரும், சிந்திப்பவரும், புனிதமடைகின்றனர். அவனுடைய நாமத்தை உச்சரிப்பவர்களை துன்பக் கடலைக் கடக்கும் ஓர் படகாக ராம நாமம் உதவுவதாக துளசிதாஸர் கூறுகிறார்.
``நிஜ ஸந்தேஹ, மோஹ, ப்ரம, ஹர நீ
கரவும் கதாபவ ஸரிதா தரனீ
பாமர மக்களும் இராம கதையைக் கேட்டுப் படிக்கும் வகையில் துளஸி ராமாயணம் அமைந்துள்ளது.
அவன் பிறந்த நன்னாளை நாம் ஷ்ரீராம நவமி என்று கொண்டாடுகிறோம். இது மகிழ்ச்சி கலந்த நன்னாள். அதை விரத தினமாக அனுஷ்டிக்கிறோம். வீடுகளில் பாயசம், வடை என்று அமர்க்களப்படும். அத்துடன் நீர் மோர், பானகம், பயத்தம் பருப்பை ஊற வைத்து அதில் வெள்ளரிக்காய், மாங்காய் போட்டுக் கலந்து கடுகு தாளித்து விநியோகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.
நல்ல கணவர், குழந்தைகள் இரண்டையுமே இந்த விரதம் தந்துவிடும்.
ராம நவமி உற்சவம் பத்து தினங்கள் கோயில்களில் கொண்டாடுவார்கள். பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து தக்ஷணை கொடுத்து விசிறி கொடுப்பதும் வழக்கம். இராமாயணம் படிப்பதும் உண்டு.
நாம் சுலபமாகச் சொல்ல சிவபெருமான் பார்வதிக்கும் சொன்ன மந்திரத்தைச் சொல்லலாம்.
ஷ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே...!
ஸஹஸ்ர நாமதத் துல்யம் ராம நாம வராநநே
ஒரு சமயம் பார்வதி அதி விசேஷமான மந்திரத்தை தமக்கு உபதேசிக்க வேண்டும் என்று கேட்டாளாம். சிவபெருமான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பார்வதிக்கு உபதேசித்தார்.
ஒரு சமயம் இருவரும் அவசரமாக வெளியே கிளம்பினார்கள். பார்வதியால் முழு பூஜையைச் செய்ய இயலவில்லை. மேற்கூறிய ``ஷ்ரீராம ராமேதி'' என்ற மந்திரத்தை மட்டும் கூறிவிட்டுப் புறப்பட்டாளாம்.
இந்த மந்திரத்தை மட்டும் கூறினால் கூட விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பூஜித்த பலன் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதியே ஸர்வதாரி ஆண்டு பிறந்த விடுகிறது. அடுத்த நாளே ஷ்ரீராம நவமி வந்து விடுகிறது. வருடப்பிறப்பு பிறந்ததுமே ராமனின் அவதார நாளையும் கொண்டாடுகிறோம். அதனால் வருடம் பூராவும் சிறப்பாக இருக்க ராமனை பிரார்த்தனை செய்து கொள்வோம்.
சித்திரை மாதம் சிறப்பான மாதம். தமிழ் வருடப் பிறப்பை கொண்டாடும் மாதம். வேப்பம் பூவும் மாங்காய் பச்சடியும் மணக்கும் நாள்.

0 comments:
Post a Comment