Friday, July 11, 2008

மஷ்ரூம் சூப்

தேவையான பொருள்கள்:

பொடியாக நறுக்கிய மஷ்ரூம்,
வெங்காயம் தலா - 1 கப்,
வேகவைத்த காய்கறித் தண்ணீர் - 4 கப்,
ஸ்கிம்டு மில்க் பவுடர் - 3 டீஸ்பூன்,
சாதம் - 2 டீஸ்பூன்,
மிளகு, உப்பு - தேவையான அளவு,
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

சிறிதளவு காய்கறி வேக வைத்த தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் மைதா மாவையும், ஸ்கிம்டு மில்க் பவுடரையும் கலக்கவும். மஷ்ரூமை காய்கறித் தண்ணீரில் வேக வைக்கவும்.

எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம், வெந்த மஷ்ரூமை போட்டு வதக்கிக் கொள்ளவும். இத்துடன் மிளகு, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வதக்கி, அத்துடன் காய்கறி தண்ணீரில் கலக்கி வைத்துள்ள கலவையை மெதுவாக ஊற்றவும்.

லேசாக ஒரு கொதி வந்தவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை இந்தக் கலவையுடன் கலக்கவும். கடைசியாக இரண்டு டீஸ்பூன் சாதத்தையும் இத்துடன் கலக்கவும். எக்ஸாம் நேர ஹெல்த்தி சூப் ரெடி!

0 comments: