Saturday, July 19, 2008

டெலிபோன்

டெலிபோன் ஒலித்தது.

``ஹலோ. யாருங்க வேணும்...'' ஜானகி கேட்டாள்.

``நான் வரதன் பேசறேன்மா. ராஜன் இருக்காரா...''

``ஆங். சொல்லுப்பா வரதா. நல்லாருக்கியா...'' ராஜன் விசாரித்தார்,

``நல்லாருக்கேன் சார். ஹாப்பி பர்த்டே சார்...''

``அட! எனக்கே மறந்துட்டுது. நீ விசாரிச்சதுல சந்தோஷம்பா...'' மேலும் சற்றுப் பேசினார். சிரிப்பாய் போனை வைத்தார்.

ஜானகி வெடித்தாள்.

``பெரிய கம்பெனி முதலாளி. உங்க பிறந்த நாளுக்கு போன் செய்யற அளவுக்கு பழக்கம். உங்ககிட்ட படிச்சவர். அந்த கம்பெனிலதான், ரவியும் வேலைக்கு தவமிருக்கான். ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல.''

``அம்மா எனக்கு வேலை கிடைச்சிட்டுது...

என் அப்ளிகேஷனைப் பார்த்துட்டுதான், வரதன் சார் அப்பாவுக்கு போன் செஞ்சிருக்கார். அப்ப கூட, உங்கப்பா ரெகமண்ட் செய்யலை; நீயும் கேட்கலை. கௌரவமிருக்கிற இடத்துல, திறமை இருக்கத்தான் செய்யும்.

ஸோ, உனக்குத்தான் இந்த வேலைன்னு சொன்னார்ம்மா...''

அப்பா, இப்போதும் எதுவும் சொல்லவில்லை

0 comments: