Saturday, July 19, 2008

ஆக்ஸிடென்ட்

ஒரே ஆபீஸில் பக்கத்து, பக்கத்து சீட்டில் கலாவும், நானும் பல வருடங்கள் வேலை பார்த்தோம். பாசமா பல அந்தரங்கங்களை ஆத்மார்த்தமாக பரிமாறிக் கொண்டோம். பிறகு சில வருடங்களில் வேலை மாறுதலால் பிரிந்தோம்.

நண்பர் திருமணத்திற்கு நாங்கள் போக, யதேச்சையாக எதிரில் தென்பட்ட கலாவைப் பார்த்ததும் `ஹய் ஹய் ஹய்' என விவேக் பாணியில் வரவேற்று கட்டியணைத்துப் பேசி, பிரிய மனமில்லாமல் விடைபெற்றேன்.

``எப்படியிருந்தவ கலா! எப்படியாயிட்டா! தலைநிறைய முடியும், கருநாகம் போன்ற ஜடையும், வாய்கொள்ளா சிரிப்பும், பார்ப்பவரை மயக்கும் உடல்வாகும்! ஆனால் இன்று தலையில் `ஸ்கார்ப்பும்', ஒட்டிய கன்னங்களும், மெலிந்த உடம்பும்... ஆண்டவா அவளைக் காப்பாற்று. பார்த்தாலே அவளின் நோய் தெரிகிறது. அவளின் மனம் புண்படாதவாறு நான் ஜாலியாக பேசியது அவளுக்கு ஆறுதலாக இருக்கும். எனக்கும் நிம்மதி'' என பெருமூச்சுவிட்டாள்.

``எப்படிப்பட்டது எங்கள் நட்பு, ஆனால் ஒரு சமாதானத்திற்கு, ஒரு பேச்சிற்கு, ஒரு ஆறுதலுக்காவது சித்ரா என்னிடம் `என்ன ஆச்சுடீ கலா' எனக் கேட்டிருக்கலாம். நான் அவளிடம் இதைத்தான் எதிர்பார்த்தேன்.'' கலாவின் மனம் சங்கடத்தில் ஆழ்ந்தது

0 comments: