இவ்ளோ நகை, பணத்தை என்னய்யா பண்ணப் போறே?''
``கொடுத்திடப் போறேன்'' ஒற்றை வரியில் பதில் சொன்னவன்... அன்று காலையிலிருந்து தனது ஆட்டோவில் பயணம் செய்தவர்களை ஞாபகப்படுத்திக்கொண்டே வர.. சூளைமேட்டிலிருக்கும் அந்தக் கல்யாண மண்டபத்திற்குப் பயணம் செய்த ஒரு முதியவரின் முகம் நினைவுக்கு வந்தது. சட்டென்று தமிழரசியை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
மாரி யூகித்தது போலவே... கல்யாண மண்டபத்தினுள் போன கையோடு வெளியே வந்தவன் ஆட்டோவை நகர்த்தினான்.
``என்னய்யா ஆச்சு'' தமிழரசி பதற்றமாகக் கேட்டாள்.
``உள்ளே இருக்கிற மாப்பிள்ளை என்னோட ஆட்டோவுல பலமுறை பல பெண்களோட சவாரி வந்து தப்புத் தப்பா சில்மிஷம் பண்ணுவான்.
அவன் ஒரு தப்பான ஆளு. இந்தப் பையை நான் கொடுத்திருந்தா கல்யாணம் நடந்து... அதனால தப்பான ஆள்கிட்டே மாட்டி அந்த முதியவரோட பொண்ணுடைய வாழ்க்கை பாழாகி இருக்கும். இது நடக்கவேணாம்னு தான் திரும்பி வந்துட்டேன். விடிஞ்சதும் முதல் வேலையா இந்தப் பணத்தை போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சிடலாம்.''.
Saturday, July 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment