Wednesday, July 16, 2008

மீன் குழம்பு

தேவையானப் பொருட்கள்
மத்தி மீன் =1/2கி
வெங்காயம் =200கி
தக்காளி =200கி
ப.மிளகாய் =4
வரமிளகாய் =2
மிளகாய்பொடி =3ஸ்பூன்
மல்லிபொடி =4ஸ்பூன்
ம.பொடி =1/4ஸ்பூன்
புளி =எலுமிச்சையளவு
உப்பு =தேவையானது
மிளகு =1ஸ்பூன்
பூண்டு =6பல்
சீரகம் =1ஸ்பூன்
கருவேப்பிலை =1கொத்து
எண்ணை =1குழிக்கரண்டி
கடுகு =1ஸ்பூன்
வெந்தயம் =1/2ஸ்பூன்

செய்முறை

வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
தக்காளியை அரைக்கவும்.
மிளகு, சீரகம், கருவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணை விட்டு கடுகு, வெந்தயம், வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து அரைத்த வெங்கயத்தை சேர்த்து வதக்கி, தக்காளி,கீறிய ப.மிளகாய் சேர்த்து கிளரவும். மிளகாய்பொடி, மல்லிபொடி, ம.பொடி, உப்பு போட்டு கிளறி புளியை 2கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் மீனை போட்டு 2கொதி வந்தவுடன் இறக்கவும்.

0 comments: