நீங்கள் புதிதாக ஓர் இடத்துக்குப் போகிறீர்கள். அங்கே எப்படிப்பட்ட சூழல் இருக்கும்? எப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பார்கள்? அச்சமூட்டும்படி அங்கே ஏதாவது தீவினைகள் இருக்குமா?
இப்படி எல்லா விஷயங்களும் தெரிந்தால் அல்லவா நீங்கள் நிம்மதியாக அங்கே இருக்க முடியும்?
அதேசமயம், அங்கே காவலர் ஒருவர் இருக்கிறார். அவரைத் தாண்டி அங்கே எந்தத் தீயசக்தியும் உள்ளே வரமுடியாது. அவரது கட்டுப்பாட்டில் இருக்கும்வரை எவரும் தீயவராகவோ,பிறருக்குத் தீங்கு நினைப்பவராகவோ இருக்க முடியாது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், அந்த இடம் எப்படி இருக்கும்? அமைதியானதாக, எந்தவித ஆபத்தும் இல்லாததாக, எதிரி பயம் இல்லாததாக இருக்கும் அல்லவா?
மனிதர்கள் காவலாக இருக்கும் இடத்துக்கே இப்படிச் சிறப்பு என்றால், தெய்வம் காவலாக இருக்கும் இடத்தில் எத்தனை சிறப்பு இருக்கும்? அப்படிக் காவலாக பல ஊர்களின் எல்லையிலே அமைந்திருக்கும் அம்பிகையின் வடிவம்தான் எல்லையம்மன்.
காவல் தெய்வமாக இந்த அம்மன் அமர்ந்தது ஏன்?
அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது?
பாரதத்தின் தென்பகுதியில் சித்தர்கள், யோகிகள், தவசிகள் நிறைந்திருந்த காலம். இயற்கை மட்டுமன்றி இப்பூமியில் இருந்தோரின் மனமும் மாசுபடாமல் இருந்த காலம் அது என்பதால், எங்கும் இறைசக்தி நிறைந்திருந்தது. அதனால், நினைத்த இடத்தில், விரும்பிய போதெல்லாம் தியானத்திலும் தவத்திலும் நாட்கணக்கில்,மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ஆழ்ந்தார்கள் சித்தர்களும், தவசிகளும்.
காலம் மெதுவாக நகர்ந்ததில் எப்படியோ வேகமாகப் பரவின தீவினைகளும், சூழ்ச்சிகளும். அதனால், தவமிருக்கத் தக்க இடமின்றித் தவித்தனர் புனிதர்கள். ஒன்று கூடி யோசித்தனர். ஒரு யோசனை செய்தனர்.
அவரவர்க்குப் பிடித்த இடத்தைத் தேர்வு செய்தனர். அங்கே காவலாக இருக்கும்படி அம்பிகையை வேண்டினர். மனம் இரங்கினாள் மகேஸ்வரி. தன் அம்சமாக ஓர் அம்பிகையைப் படைத்தாள். ``எல்லையைக் காத்திடும் தெய்வமாக `எல்லையம்மன்' என்ற திருப்பெயரோடு எங்கெங்கும் எழுந்தருள்க!'' என்று ஆசியளித்து, அவளை பூவுலகுக்கு அனுப்பினாள் புவனமாதா.
எல்லையம்மனின் காவலில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தவமும் தியானமும் புரிந்தார்கள் சித்தர்களும், யோகிகளும்.
காவலாக வந்த எல்லையம்மனுக்கு தலங்கள் பலவற்றில் கோயில்கள் அமைந்தன. அங்கெல்லாம் சென்று வழிபடும் பக்தர்களின் வாழ்வில் வரும் தடைகளும், சோதனைகளும் விலகின. தீவினைகள் விரட்டப்பட்டு நிம்மதியாய் வாழ்ந்தார்கள்.
`எல்' என்றால் தூய தமிழில் இரவும் பகலும் என்று அர்த்தம். பகலிரவு பாராமல் தன் பக்தர்களைக் காப்பதால், எல்லையம்மன் மருவி எல்லம்மன் ஆனாள்.
அப்படி அமைந்த எல்லம்மன் கோயில்களுள் ஒன்று, சென்னையில் பட்டாளம் பகுதியில் அமைந்துள்ளது.
எழிலான முகப்பு தெரிகிறதே என்று சாலையில் செல்லும் போது லேசாகத் தலை திருப்பினாலே போதும்... எழிலே வடிவான எல்லம்மனின் தரிசனம், நம்மை அன்போடு, `வா!'' என்றழைக்கும்.
நேர் எதிரேயுள்ள கருவறையில், கரங்கள் நான்கோடு கருணை வடிவாகக் காட்சியளிக்கிறாள், எல்லம்மன். என் பார்வை பட்டு நீ எங்கே சென்றாலும் அங்கெல்லாம் காவலாக உன் அருகே நான் இருப்பேன்...'' என்று சொல்லாமல் சொல்பவள் போல், மென் நகை தவழ காட்சியளிக்கும் தேவியை அகமும் புறமும் சிலிர்க்க தரிசிக்கிறோம். இனி எந்த பயமும் நமக்கில்லை என்னும் தைரியத்தோடு, எண்ணியன எல்லாம் ஈடேறும் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.
அன்னையின் முன், சிரம் வரையேயான சிலா திருமேனியும் உள்ளது.
கணபதி, கந்தன், விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர், நாகர், துர்க்கை, நவகிரகங்கள் என்று எல்லா தெய்வங்களின் தரிசனமும் வலம் வரும்போது கிடைக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் ஆட்சிக்குட்பட்ட இக்கோயில், சமீபத்தில் குடமுழுக்கு கண்டு, 5.7.2008 அன்று மண்டல அபிஷேகப் பூர்த்தி விழாக் காணவுள்ளது.
ஆடிமாதத்தில் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் ஆரம்பிக்கப்படும் உற்சவம், பதினைந்து நாட்கள் அதி விமரிசையாக நடக்குமாம் இங்கே. அந்த சமயத்தில் இந்த அன்னையை தரிசிப்போர், மனம்போல மணப்பேறும், மகப்பேறும் பெற்றிட அருள்வாள் எல்லம்மன் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை.
காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். எப்போது நீங்கள் போனாலும் ஆசிவழங்கத் தயாராக -அன்புத் தாயாராக காத்திருக்கிறாள் எல்லம்மன். காவல் தெய்வமானாலும் அவளைக் காக்க வைக்காமல் உடனே போயிட்டு வாங்க!
சென்னை, புரசைவாக்கத்தை அடுத்துள்ள பட்டாளம் பகுதியில் 183, ஸ்ட்ரஹான்ஸ் சாலையில் உள்ளது இக்கோயில்.

0 comments:
Post a Comment