தனிமை இராத்திரி..
அரையிருளாய் எரியும் வண்ண விளக்குநடுங்கும் நிழலுடன் நனைந்த நான்அரைகுறையாய் துவட்டிய துண்டைஉன் அவசரக் குளியலுக்கு அபகரித்துப் போவாய்
முதுகின் பின்னால் உன் குறும்புப் புன்னகைஎன் இடைதழுவும் விரல்நகங்களில் தெரியும்கழுத்தில் முடி விலக்கும் உன் மூச்சுக்காற்றுநீ கவனமாய் ரசிப்பதை எனக்கு உணர்த்தும்
நேற்று இரவு தொடக்கம் எண்ணிபதறும் மனம் வெட்கப்பட்டுஅடுத்து என்ன ஆவல் கொண்டுதயங்கும் விரல் நகர்த்தையில்எப்போதும் போல் அவகாசம் தந்துநீ இப்போதும் என் அவஸ்தை ரசிப்பாய்
எட்டித் தள்ளும் என் பொய்க்கோபம்உன்னைத் தோல்வி ஏற்று தொடரச் செய்யும்மணவறை முதல்தொடுகைப் போல்மறுபடியும் என்னை சிலிர்க்கச் செய்யும்
கொதிப்பாய் வரும் இரு மூச்சு ஓசைஅமைதி இரவின் நிசப்தம் கலைக்கும்இருவர் மட்டுமான ஏகாந்தம்இப்போது மட்டும் ரொம்பப் பிடிக்கும்
ஈரக்கூந்தல் சிந்தும் முத்துத்துளிகள்உன் மார்பில் பட்டுத் தெறிக்கும்அணைத்த பொழுது நாணம் போல்அதுவும் மெல்ல மறைந்து போகும்உன் இரவுக் குளியலின் சோப்பு வாசம்விடியல் பொழுதில் என்மீது வீசும்
ஒவ்வொரு விடியல் பிறக்கையிலும்நானும் புதிதாய் பிறந்திடுவேன்எத்தனை நாள் பிறப்பாய் என்றுஇறைவன் பொறுமை இழந்தானோஇனிக்கும் இரவு நினைவுகளைசோம்பல் காலையில் டீயுடன் அருந்திபறக்கும் முத்தம் கொடுத்தேஅன்றும் பணிக்கு உற்சாகமாய் சென்றாய்
எதற்கோ எங்கோ சென்ற நீஇரட்டை கோபுரச் சரிவில் சிக்கிஇரண்டு நாட்கள் சென்ற பின்புஎன்னிடம் கட்டிக் கொடுக்கப்பட்டாய்ஆறடி கட்டிலும் போதாது என்ற நீமூன்றடி பையுக்குள் அடங்கியது எப்படி!
இறுகப் பற்றிய செல்போனில்கடைசியாய் என்னை ஏன் அழைத்தாய்?இடிந்த கட்டிடம் சுமை தாளாமல்பகிர்ந்துகொள்ள என்னை அழைத்தாயோஇல்லை இறுதி மூச்சில் இமை மூடிநேற்று இரவுநாடகம் நினைத்தாயோ
என்ன அவசரம் என்னவனே..
எண்ணிவிடும் பொழுதுகள் மட்டும்என்னுடன் இருந்துவிட்டுஎத்தனையோ மாற்றங்களைஎன்னுள்ளே விதைத்துவிட்டுஅத்தனையும் ஏமாற்றங்களாய்விளைய விட்டது நியாயமா?
இனிமை ராத்திரிகள் இனி இல்லையெனபொய்யாய்கூட நீ சொன்னது இல்லைதனிமை இராத்திரிகள் கொடுமை கணவாஉன் நினைவுகள் மட்டும் போதாதுஇனி நீயில்லை என்னும் நிஜம்என்னையும் மெல்லக் கொல்லும்
Saturday, July 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment