Wednesday, July 16, 2008

பிரட் கைமா

தேவையானப் பொருட்கள்
ப்ரட் -- 6 என்னம்
சிக்கன் -- 1/4 கிலோ
தக்காளி -- 1 என்னம்(பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா -- 2 டீஸ்பூன்
பட்டை -- 1 அங்குலம் அளவு
லவங்கம் -- 1 என்னம்
ஏலக்காய் -- 1 என்னம்
மங்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -- 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -- 2 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
எண்ணைய் -- தே.அ
கடுகு -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
வெங்காயம் -- 1என்னம் (பொடியாக நறுக்கியது)

செய்முறை

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி சிக்கனை சேர்க்கவும்.
இதில் மஞ்சள் தூள், மிளகாய் பொடி, கரம் மசாலா, இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
1/2 கப் தண்ணீர் சேர்த்துவேகவிடவும்.
கறி நன்றாக வெந்ததும் கலவை திக்கானதும் பிரட்டை சிறியதாக துண்டங்களாக வெட்டி நெய்யில் வறுத்து கைமா கலவையில் கொட்டு கிளறி இறக்கி பறிமாறவும்.
கைமா ப்ரட் ரெடி.

0 comments: