Tuesday, July 15, 2008

சக்சஸ் !

அப்பா, மீண்டும் ஜெகனுக்கு ஞாபகப்படுத்தினார்.

``கரெக்டா... இண்டர்வியூக்குப் போயிடுடா. பெரிய கம்பெனி; நல்ல வேலைடா...''

`இண்டர்வியூ எல்லாம் சும்மா ஃபார்மாலிட்டிக்காகத்தான் நடத்தறாங்கப்பா; ஏற்கெனவே, எவனோ ஒரு சொந்தக்காரப்பசங்களுக்கு குடுத்திருப்பாங்க. இது மாதிரி, ஆயிரம் பாத்தாச்சுப்பா..'' ஜெகன் அலுத்துக் கொண்டான்.

``அந்த சொந்தக்காரப் பையன்... நீதாண்டா...''

ஜெகன் திடுக்கிட்டுக் கேட்டான். ``என்ன... என்ன சொல்றப்பா..?''

``இந்தக் கம்பெனி `பாஸ்', என் குளோஸ் ஃப்ரெண்டுடா. உனக்குத்தான் இந்த வேலைன்னு சொல்லிருக்கார்...''

இண்டர்வியூவில் ஆச்சரியமாய், அவனுக்குத் தெரிந்த கேள்விகளே கேட்கப்பட்டன.

`டாண்... டாண்' என பதில் சொன்னான். கம்பீரமாகவும் சொன்னான்.

`யு.ஆர். அப்பாயிண்டட் ஜெகன். எப்ப ஜாயின் பண்ணறீங்க...?'' மானேஜர் கேட்டார்.

``நாளைக்கே!'' என்றவன், அப்பாவிடம் வந்து அவரின் நண்பருக்கு நன்றி சொல்லச் சொன்னான்...

``அப்படியொரு ஃப்ரெண்டே எனக்குக் கிடையாது'' _ அவர் சொல்ல. ஜெகனுக்கு ஷாக்!

``நீ, அவநம்பிக்கையோட வேலை தேடினே. கிடைக்கல, உனக்குள் ஒரு நம்பிக்கை வரட்டும்னு இப்படிச் செய்தேன், நான் நினைச்சது வீண் போகலை'' அப்பா சிரித்தார்..

0 comments: