Monday, July 7, 2008

பயறு சுண்டல்


தேவையானவை

பயறு - 1 கப்
வெங்காயம் - 1
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 2
கடுகு - 2 தேக்கரண்டி
பெருங்காயம், கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை

முதல் நாள் இரவு ஊறவைத்த முழு பாசிப் பயறை நன்கு மலர வேக வைத்து நீரை வடிகட்டவும். (அந்த நீருடன் உப்பு/மோர் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்) தேவையான அளவு உப்பு சேர்க்க ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல் போட்டு பொரிந்தவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தேங்காய் கறிவேப்பிலை சேர்த்துப் பிரட்டி வெந்த பயறைக் கொட்டி கிளறி இறக்கவும்.
விருப்பமுள்ளவர்கள் மசாலா சேர்க்கலாம்

0 comments: