Friday, August 1, 2008

அம்பிகா ஆம்பிளை மாதிரி

ஏண்டி, நம்ம அம்புஜம் பொண்ணை சம்புவுக்குப் பார்த்தா என்ன?'' என்றார் சாம்பசிவம். சம்பு அவரது ஒரே மகன். அப்பாவுடன்தான் போவான். எதையும் தனியாகச் செய்ய அவனுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவனுக்கு... அம்புஜம் மாமியோட பெண்ணைப் பார்ப்பதா?

``அம்பிகா... ஆம்பிளை கணக்கா மொபட் ஓட்டுறா. சிட்டி பூராவும் தனியா ரவுண்ட்ஸ் வர்றா. அவளை மாட்டுப் பொண்ணா கொண்டு வந்தா... நம்ம சம்புவோட கதி, அதோ கதிதான்...'' என்றாள் செண்பகம்.

சில மாதம் போனது. சம்புவின் பாட்டி சாம்பசிவத்தின் தாய் இறந்தபோது, அவர் ஊரில் இல்லை. செண்பகத்திற்கு ஒன்றும் ஓடவில்லை.

``டோண்ட் ஒர்ரி ஆண்ட்டி, நான் பார்த்துக்கறேன்'' என்று காரியம் முடிவதற்குத் தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடித்தாள்அம்பிகா.

அவள் மட்டும் இல்லாவிட்டால்... பொம்மையைப் போல உட்கார்ந்திருக்கும் தன் மகன் சம்புவை வைத்துக்கொண்டு அவள் என்ன செய்திருப்பாள்?

``என்னங்க! எவ்வளவு நாள் ஆனாலும் சரி, அம்பிகாதான் நம்ம வீட்டு மருமகளா வரணும்!'' செண்பகம் சொன்னபோது, சாம்பசிவம் அர்த்தத்துடன் புன்னகைத்தார்..

0 comments: