Friday, August 1, 2008

ஸ்வேதா கிளம்பி விட்டாள்!

கல்யாணம் முடிந்து மறுவீட்டுக்கு வந்த தினேஷ், சீக்கு கோழி மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். அருகில் வந்த ஸ்வேதாவின் தங்கை ரமா கேட்டாள்.

``என்ன அத்தான், டல்லா இருக்கீங்க?''

``உனக்கே தெரியும். ஸ்வேதான்னு பேர் மட்டும்தான் உன் அக்காவுக்கு மாடர்னா இருக்கு. ஆனா இத்தனை அட்டைக்கருப்பா இருப்பாள்னு நான் நினைக்கலை. என் வாழ்க்கையே போச்சு. கருப்பி புருஷன்னு ஊர் பொண்ணுங்கல்லாம் கிண்டல் பண்ணப்போறா....''

``ப்பூ இவ்வளவுதானா மேட்டரு. ஊர்ல உள்ள பொண்ணுங்க எல்லாத்தையும் உங்க பின்னாடி வர்ற மாதிரி செய்யவா?

அக்காவை தாங்கு தாங்குனு தாங்குங்க. இத்தனை கருப்பான பொண்டாட்டியையே இப்படித் தாங்கறாரே இந்த மனுஷன்; இவர் நமக்குக்கிடைக்கலையேனு அவ அவ கிடந்து உங்களை சைட் அடிக்கப் போறாளுக பாருங்களேன்.''

ஸ்வேதாவைத் தாங்கினான் தினேஷ்.

பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள் ஸ்வேதா.

``அப்பா, தெரு முழுக்க பொம்பளைங்களை இவர் சைட் அடிக்கிறார். என்னால அங்க குடும்பம் நடத்த முடியாது'' என்று சொல்லிக் கொண்டிருக்க, `ஒரு கருப்பிகூட இல்லாம பண்ணிட்டேயே..' என ரமாவை முறைத்தான் தினேஷ்!.

``ஸாரி அத்தான்''என்று குறும்புடன் சிரித்தாள் ரமா..

0 comments: