தேவையான பொருட்கள் :
வெள்ளை ரவை - 2 கப்,
கடலைப்பருப்பு, உளுந்து, துவரம்பருப்பு - தலா அரைகப்,
பெரிய நெல்லிக்காய் -அரைகப்,
பச்சைமிளகாய் - 6,
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு,
நெய் - 1 டேபிள் ஸ்புன்,
பெருங்காயம் -சிறிதளவு,
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப,
தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்.
செய்முறை :
பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ரவையில் தேங்காய்ப் பாலை ஊற்றிப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். நெல்லிக்காயைக் கழுவி, துருவி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், மல்லி இலைகளைப் பொடியாக நறுக்கவும். அரைத்த பருப்புடன் ரவை, துருவிய நெல்லிக்காய், பச்சைமிளகாய், மல்லி சேர்த்து கலக்கவும். பெருங்காயம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கெட்டியாக இட்லி மாவு பதத்தில் கரைத்து, சூடான தவாவில் சிறு சிறு அடைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வேக விட்டு எடுக்கவும்
Thursday, August 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment