தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 1/4 கிலோ,
பெரிய நெல்லிக்காய் - 10,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
ஜீரகம் - சிறிதளவு,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
உப்பு - சுவைக்கேற்ப,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்.
செய்முறை :
கத்தரிக்காயை அடுப்பில் நன்றாகச் சுட்டு, தோலை உரித்து, துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும். நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்து எடுத்து, கொட்டை நீக்கி, மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு, மசித்த நெல்லிக்காயைச் சேர்த்து உப்பு, தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மூன்றையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். சிறிதளவு நீர் விட்டுக் கொதித்து வற்றியதும், கத்தரிக்காய் துண்டுகள், கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
Thursday, August 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment