Thursday, August 14, 2008

நெல்லிக்காய் ஜாமூன்

தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 1/4 கிலோ,
சர்க்கரை - அரைகிலோ,
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

முதலில் நல்ல நெல்லிக்காய்களாகத் தேர்வுசெய்து, கழுவிய பிறகு ஒரு சுத்தமான ஊசியால் நெல்லிக்காய் முழுவதும் குத்தவும். சமையல் சோடாவைத் தண்ணீரில் கலந்து அதில் நெல்லிக்காய்களைப் போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நெல்லிக்காய்களை நன்றாகக் கழுவி விட்டு, வேறு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நெல்லிக்காய்கள் `மெத்'தென்று ஆகும் வரை வேக வைக்கவும்! குங்குமப்பூவை இளம் சூடான நீரில் ஊற வைத்துக் கரைக்கவும். ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, தேவையான அளவு நீர் விட்டு, பாகுகாய்ச்சவும். பின்பு வேக வைத்த நெல்லிக்காய்களை பாகில் போட்டு, குறைந்த தணலில் சிறிது நேரம் வைத்திருக்கவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்

0 comments: