Thursday, August 14, 2008

நெல்லிக்காய் சொதி

தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் - 1 கப்,
தேங்காய் - 1 மூடி,
பச்சைமிளகாய் - 7,
பெரிய வெங்காயம் - 1,
மஞ்சள் பொடி - 1/4டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
கிராம்பு - 2,
பட்டை - 1,
இஞ்சித் துண்டு,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்கி, நான்கு துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் துருவி, மிக்ஸியில் அரைத்து, முதல் பால், இரண்டாம் பாலை எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, நெல்லிக்காயையும் சேர்த்து வதக்கவும். பின், அத்துடன் இரண்டாவது தேங்காய் பாலை ஊற்றி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். நெல்லிக்காய் வெந்ததும், முதல் பாலை விட்டுக் கொதி வந்ததும் இறக்கி விடவும். பரிமாறினால், அசத்தலாக இருக்கும்.

0 comments: