ஜானகிக்கு, புருஷன் ஜெகனை நினைத்து பற்றிக் கொண்டு வந்தது. `சிக்கனச் செம்மலாகி விட்டாரே என ஆத்திரப்பட்டாள்.
``ஜானு....! உன் ஆசைப்படியே, ஊட்டிக்குத்தானே போறோம். உம்முனு உட்கார்ந்திருக்க...?'' ஜெகன் கேட்டான்.
``வேணாம்... வெறுப்பேத்தாதீங்க...'' என்று முகத்தைத் திருப்பினாள் ஜானகி.
நடந்தது இதுதான். அரசு ஊழியர் ஜெகனுக்கு, ``ஏ.சி.' கோச் எல்.டி.சி. வாய்ப்பு, 15 வருஷத்தில் இப்போதுதான் போட முடிந்திருக்கிறது. அதுவும், சிங்கிள் கூபேயே கிடைத்தது. திடீரென, ஜெகன், `நான் ஏசி' கோச்சுக்கு மாற்றி விட்டார்.
``ச்சே. கஞ்ச மகாப் பிரபுவாயிட்டிங்க. `ஏ.சி.' கோச்சுல போகணும்னு, ஒரு அல்ப ஆசை. எல்.டி.சி. உபயத்தில கிடைச்சது. பணத்தை மிச்சம் பண்ணலாம்னு, அதக் கெடுத்திட்டீங்களே..''
ஜானகி வெடிக்க ஜெகன் அமைதியாய் சொன்னார்.
``ச்சு...! சும்மாயிரு ஜானகி. அந்த `கப்பிள்ஸ்'க்கு நம்ம கூபேலேதான் டி.டி., இடம் ஒதுக்கியிருந்தார்.
அவங்களோ, ஹனிமூன் கப்பிள்ஸ்; நமக்கு தர்ம சங்கடம்; அதுங்களுக்கு இடைஞ்சல். அதான் மாத்திக்கிட்டேன். புரியுதா...''
ஜெகனின் பதிலால், காதலான காதலுடன் பார்த்தாள் ஜானகி..
Sunday, August 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment