Friday, August 1, 2008

உப்புச்சீடை

தேவையானப் பொருட்கள்
அரிசிமாவு =1கி
உளுந்துமாவு =1/4கி
தேங்காய் =1
உப்பு =தேவையானது
வெண்ணை =100கி
எண்ணை =500கி

செய்முறை
தேங்காயை ஆட்டி பாலெடுத்துக்கொள்ளவும்.
அரிசிமாவையும், உளுந்து மாவையும் சலித்து கொள்ளவும்.
மாவுடன் உப்பு, வெண்ணை, தேங்காய்ப்பால் விட்டு உருட்டும் பக்குவத்திற்கு பிசையவும்.
எல்லவற்றையும் உருட்டவும்.
கடாயில் எண்ணை சூடானதும் பொரித்தெடுக்கவும். எண்ணை சலசலப்பு அடங்கினால் சீடை வெந்திருக்கும்.

குறிப்பு:
எண்ணை அதிகம் சூடேற்றக்கூடாது. அதாவது புகை வரும் அளவுக்கு காயவிடக்கூடாது. சீடை வெடித்து சிதறி விடும்.எள் போடுவதென்றால் 100கி எள்ளை வெறும் வாணலியில் சிறுதீயில் பொரித்து பிசையும் போது சேர்த்து கொள்ளலாம்.

0 comments: