Sunday, August 3, 2008

அக்னி நட்சத்திரம்

``சே. என்னங்க, வெயில் இப்படிக் கொளுத்துது?'' என்றார் அஷோக்.

``அநியாயங்க, கோடைகாலத்தோட கடைசிலேதான் அக்னி நட்சத்திரம் வரும்னு சொல்வாங்க. இப்ப என்னடான்னா அக்னி நட்சத்திரத்-தோடதான் கோடை-காலமே தொடங்குது'' இது அவரது நண்பர் சுந்தர்.

``பேப்பர்லே பார்த்தீங்களா, நாலே நாள்ல பத்துப்பேர் வெயிலுக்குப் பலியாயிருக்காங்களாம்.''

``அதுவாவது கொஞ்சம் வயசானவங்களா இருந்திருக்கும், வெயில் தாங்கமுடியாமே பொட்டுனு போயிருக்கலாம். எங்க கம்பெனியில வேலைசெய்யற இளைஞன் ஒருவன், பஸ்லேயிருந்து இறங்கி ஆபீஸுக்கு நடந்திட்டிருக்கறப்பவே சூடு தாங்காமே அப்படியே மயங்கி ரோட்டிலேவிழுந்திருக்கான்.''

``எப்படித்தான் இந்த வெயிலைச் சமாளிக்கப் போறோமோன்னு நினைச்-சா உண்மையிலேயே கவலையாத்தான் இருக்கு.''

``என்ன பண்றது? சமாளிச்சுத்தான் ஆகணும். ஓ.கே. சுந்தர், அப்ப நாளைக்குச் சந்திக்கலாம், பைபை...''

இப்படிப் பேசியவாறே, சென்ட்ரலைஸ்டு ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட ஆபீஸ் காம்ப்ளெக்ஸிலிருந்து லிஃப்ட் மூலம் `பேஸ்மென்ட்' வந்து சேர்ந்தஇருவேறு கம்பெனிகளின் மானேஜிங் டைரக்டர்களும் தத்தம் ஏ.சி. கார்களை நோக்கி நடக்கத் தொடங்கினர்..

0 comments: